intro | start | example | explain | code | demo | test-unicode | more

[copy text and paste here]

<<prev TAMIL next>>
வரலாறு முதன்மைக் கட்டுரை: தமிழ் மொழி வரலாறு மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப்போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. தமிழ் திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003).[3] பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடக்கக்கூடிய மிகப்பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.[4] பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும். பதினைந்தாம் நூற்றாண்டிலோ பதினாறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்ட கிறித்தவ சமய வழிபாட்டு ஓலைச் சுவடிகள் மொழியியலாளர் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியை மூன்று காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை, பண்டைக்காலம் (கி.மு 200 தொடக்கம் கி.பி 700 வரை), மத்திய காலம் (கி.பி 700 தொடக்கம் கி.பி 1500 வரை), நவீன காலம் (கி.பி 1500 தொடக்கம் இன்று வரை) என்பனவாகும். மத்திய காலத்தில் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமால் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மை வாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.


  Afrikaans
  Albanian
  Alemannic
  Amharic
  Arabic
  Armenian
  Basque
  Belarusian
  Bosnian
  Breton
  Bulgarian
  Catalan
  Chinese
  Croatian
  Czech
  Danish
  Dutch
  English
  Esperanto
  Estonian
  Finnish
  French
  Frisian
  Georgian
  German
  Greek
  Hawaian
  Hebrew
  Hindi
  Hungarian
  Icelandic
  Indonesian
  Irish_gaelic
  Italian
  Japanese
  Korean
  Latin
  Latvian
  Lithuanian
  Malay
  Manx
  Marathi
  Middle_frisian
  Mingo_iroquois
  Nepali
  Norwegian
  Persian_farsi
  Polish
  Portuguese_brazil
  Portuguese_europe
  Quechua
  Romanian
  Rumantsch
  Russian
  Sanskrit
  Scots
  Scots_gaelic
  Serbian
  Serbian_cyrillic
  Slovak
  Slovenian
  Spanish
  Swahili
  Swedish
  Tagalog
Tamil
  Thai
  Turkish
  Ukrainian
  Vietnamese
  Welsh
  Yiddish